FaceBook காதலியை கற்பழித்த காதலன்-நண்பர்களுக்கும் விருந்தாகிய FaceBook காதலி- Live CID
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தனுஷிகா அதே பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தனுஷிகா பேஸ்புக்கில் தனது தோழிகளுடன் தொடர்பில் உள்ளதால் அதன் மூலம் அவருக்கு பலரும் பழக்கமானார்கள். அப்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த ஏசுநேசன் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான அந்த வாலிபர் முதலில் நாகர்கோவில் மாணவியிடம் நட்பு முறையில் பழகி வந்துள்ளார். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவியை தான் காதலிப்பதாக கூறினார். முதலில் காதலை ஏற்க தயங்கிய தனுஷிகா அந்த வாலிபரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் தங்களது போட்டோக்களை பரிமாற்றிக் கொண்டனர். போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களாக அவர்களது காதல் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் அந்த வாலிபர், தனுஷிகாவிடம் அவரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறியுள்ளார், தனுஷிகா சம்மதித்ததால், ஏசுநேசன் தனது காரில் வெள்ளமடம் பகுதிக்கு வந்தார். பிறகு செல்போன் மூலம் அந்த தனுஷிகாக்கு தகவல் கொடுத்து வெள்ளமடத்திற்கு வரவழைத்தார். மாணவி அங்கு வந்ததும் அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி புறப்பட்டார்.
அந்த காரில் ஏசுநேசனுடன் அவரது நண்பரும் இருந்ததால், பயந்த அந்த மாணவி வாலிபர் பற்றி ஏசுநேசனிடம் கேட்டார். அதற்கு அவர் தனது நண்பர் ஆதிஸ் துணையாக வந்துள்ளதாகவும் கூறி தனுஷிகாவை சமாதானப்படுத்தினார். பிறகு அந்த தனுஷிகாவை காரில் அழைத்துக் கொண்டு ஆவரைகுளத்திற்கு ஏசுநேசன் சென்றார். அங்கு வைத்து அந்த மாணவியை ஏசுநேசன் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார்.
தான் அனுபவித்ததுமல்லாமல், கூடவே வந்திருந்த தனது நண்பர் ஆதிசுக்கும் அந்த தனுஷிகாவை விருந்தாக்கினார். தனது காரில் அந்த தனுஷிகாவை ஏற்றிக் கொண்டு மீண்டும் அந்த தனுஷிகாவின் ஊரில் கொண்டு சென்று விட்டுவிட்டு ஏசுநேசன் சென்றுவிட்டார்.
உடலளவில் பாதிக்கப்பட்ட அந்த தனுஷிகா தனது வீட்டாரிடம் தனக்கு நடந்த கொடுமை பற்றி சொல்லி கதறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ஏசுநேசன், ஆதீஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.