சிவில் வழக்கில் போலீஸ் என்கொய்ரி என்ற பெயரில் தலையிட கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிவில் வழக்கில் போலீஸ் என்கொய்ரி என்ற
பெயரில் தலையிடவோ, அல்லது தொந்தரவு (Harassment) , அல்லது
விசாரிக்கவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக சொத்து யாருக்கு உரிமையானது என்பதை சிவில் நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பது உயர்நீதி மன்றம் சொல்கிறது. ஆனால் சில காவல் நிலையத்தில் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இதற்க்கு உயர்நீதி மன்றம் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்ய உரிமை இல்லை என கூறுகிறது.
இதையும் மீறி பல நேரங்களில் சிவில் நீதிமன்றம் Injunction or Status Quo Order கொடுத்தாலும் சில போலீஸ் அதிகாரிகள் அதை மதிப்பதே இல்லை.
மேலும் பல நேரத்தில் கட்டபஞ்சாயத்து செய்து
மிரட்டி, FIR போட்டு Remand செய்திடுவேன் என்று மிரட்டி, இவர்களே சட்ட விரோதமாக சில தீர்ப்பு கொடுக்கின்றனர், மேலும் "சொத்து
யாருக்கு சொந்தம்" என்பதை இவர்களே பார்ட்டியை மிரட்டி எழுதி வாங்கி மிரட்டுவதும்
இது போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
இது போன்ற செயல் முழுக்க முழுக்க சட்டம் விரோதம், இது போன்ற சூழலில் போலீசால் சிவில் வழக்கில் தொந்தரவு செய்யாமல் இருக்க இது போன்ற நீதிமன்ற ஆணையினை பெற்று பயன்படுத்தி கொள்ளவும்.
இது போன்ற செயல் முழுக்க முழுக்க சட்டம் விரோதம், இது போன்ற சூழலில் போலீசால் சிவில் வழக்கில் தொந்தரவு செய்யாமல் இருக்க இது போன்ற நீதிமன்ற ஆணையினை பெற்று பயன்படுத்தி கொள்ளவும்.
(இந்த பதிவுடன் நீதிமன்ற் ஆணை இணைக்கப்பட்டுள்ளது)
court order |