மருமகனை கோடாரியில் வெட்டி கொன்ற மாமியார்-அதிர்ச்சியில் ஆந்திரா-Live CID
ஆந்திரா மாநிலம் இமகுண்டல கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(43), இவருக்கும் அதே மண்டலம், அங்கண்ணகாரிபல்லி கிராமத்தை சேர்ந்த பெத்த அக்காவின் மகள் அங்கம்மாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடித்துவிட்டு மனைவி, குழந்தையை அடித்த கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் வேதனையடைந்த அங்கம்மா இதுகுறித்து தனது தாயாரிடம் அழுத படி கூறியுள்ளார். உடனே அங்குவந்த பெத்த அக்கா தனது மகள், பேத்தி மற்றும் மருமகன் ரமேஷ் ஆகிய 3 பேரையும் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கேயே அவர்களை தங்க வைத்து வேலைக்கு செல்லுமாறு மருமகனிடம் தெரிவித்தார். மாமியாரின் அறிவுரை கேட்டு, மருமகன் ரமேஷ் சில மாதங்கள் குடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் மீண்டும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளார். இதனையறிந்த மாமியார் பலமுறை மருமகன் ரமேஷை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் திருந்தியதாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் ரமேஷ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மாமியார் கண்ணெதிரே அவரது மகளை அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷின் மாமியார் பெத்த அக்கா வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ரமேஷை சரமாரி வெட்டினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
இத தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மரத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துகுறித்து வழக்குப்பதிவு செய்து ரமேஷின் மாமியார் பெத்த அக்காவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரே மருமகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.