தன் மகனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய குடும்பம்-கொத்தாக தூக்கிய காவல்துறை-Live CID
காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யம்பேட்டை கந்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். 3 பேரும் பட்டதாரிகள். இரண்டு மகன்கள் உள்ளூரில் வேலை செய்கின்றனர். மகேஷ் என்ற மகன் மட்டும் சிங்கப்பூரில் பணிபுரிந்தார். சிங்கப்பூரில் வேலை செய்யும் மகேஷ் அவ்வப்போது தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து சென்றார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு தன் சொந்த ஊரான ஐய்யம்பேட்டைக்கு வந்தவர் மதுபோதையில் தன்னுடைய தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தை மணி மற்றும் அவர்களது 2 மகன்கள் சேர்ந்து மகேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இவரது மரணத்தை தற்கொலையாக மாற்ற வேண்டும் என கருத்தினார். பின்னர் அவருடைய சடலத்தைத் தூக்கி அங்குள்ள மின்விசிறியில் தொங்கவிட்டுள்ளனர். பின்பு மகேஷ் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேத பரிசோதனையில் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை மணி, தாய் தமிழ்செல்வி, மூத்த மகன் மோகனவேல், இளைய மகன் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.