பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி|இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு|live CID
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தற்போதைய தலைமை நீதியதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு முன் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இப்புகரை விசாரித்த சிறப்பு விசாரணை குழு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று ரஞ்சன் கோகோயிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது