இளம் பெண்களை கற்பழித்து கிணற்றில் வீசி கொலை-3 சடலம் மீட்ப்பு-அதிர்ச்சியில் தெலங்கானா-www.livecid.com|Live CID
தெலங்கானா யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பொம்மள ராமாராவ் மண்டலம் என்ற இடத்தில், சமீபத்தில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி சிராவனி, இவர் சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனதாக மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீஸார் துரிதமாக விசாரணை மேற்கொண்ட போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில், காணாமல் போன மாணவி சிராவனியின் புத்தகப்பை கிடந்துள்ளது. அதன் பின்னர் போலீஸார் கிணற்றில் இருந்து சிராவனியின் சடலத்தை ராட்சத கிரேன் மூலம் எடுத்தனர்.மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்க்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மருத்துவ உடற்கூறு சோதனை முடிவில் மாணவியை பலமுறை கற்பழித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சீனிவாசனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீஸார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், தான் மாணவி சிராவனியை வன்புணர்வு செய்து கொன்றதை ஒப்புக் கொண்டான். அது மட்டுமல்ல போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் ஏற்கனவே இரண்டு பெண்ணைக் கற்பழித்து கொன்று இதே கிணற்றில் வீசியதையும் கூறியதால் அதிர்ச்சியான போலீசார். அதன் பிறகு கிரேன் வரவழைத்து கிணற்றைத் தோண்டிப்பார்த்தனர்.
அதில் ஒரு மாணவியின் உடல் அழுகிய நிலையிலும், மற்றொரு மாணவி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது. இது சில மாதங்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்ட மணீஷா மற்றும் சரண்யா என்ற பெண்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சீனிவாச ரெட்டியைக் கைதுசெய்த போலீஸார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடுங்க வைக்கும் இந்த கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பழித்து கொலைசெய்வது தற்போதிய நிலைமையில் சர்வசாதரனமாக நடக்கிறது.காவல் துறை விசாரணையில் இன்னும் எத்தனை கொலை உள்ளோதோ??????