9 வயது சிறுமியை நிர்வாணமாக்கி கற்பழித்த டியூஷன் ஆசிரியர் - அதிர்ச்சியில் திருவனந்தபுரம்-போக்ஸோ பாய்ந்தது -www.livecid.com- Live CID
திருவனந்தபுரம் களக்கூட்டத்தை சோ்ந்தவா் விஜய் அங்குள்ள டெக்னோ பார்க் சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவர், தனியார் பள்ளியிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கோடை காலம் என்பதால் விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு ஓவிய பயிற்சியை வீட்டில் வைத்து நடத்தி வருகிறார். இதில் அந்த பகுதியை சோ்ந்த 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய விஜய், காயத்துடன் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தன்னிடம் ஓவியம் படிக்கும் பக்கத்து வீட்டை சோ்ந்த 9 வயது சிறுமியை அழைத்து முதுகில் உள்ள காயத்துக்கு மருந்து போட சொல்லியுள்ளார்.
அப்போது விஜய் அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி துணியை கழட்டி விட்டு நிர்வாணமாக்கி கற்பழித்துள்ளார். மேலும் இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார். பின்னா் வீட்டுக்கு சென்ற அந்த சிறுமிக்கு உடம்பில் ரத்தம் வடிவதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து சிறுமியிடம் நடந்ததை கேட்கும்போதே சிறுமி மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
பின்னா் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் கொடுத்தனா். இதையடுத்து வழக்கு பதிவு செய்த களக்கூட்டம் போலீசார் போக்ஸோ சட்டத்தில் விஜயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.