பொள்ளாச்சியில் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு அடித்துவிட்டு கும்மாளம்|அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம்|Live CID
பாலியல் கொடூரம் நடந்த பொள்ளாச்சியில் மீண்டும் நாடே திரும்பி பார்க்க வைக்கும் மற்றொரு சம்பவம் அதே பகுதியில் அரங்கேறியுள்ளது. கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட 159 கேரள மாணவர்களை கோவை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளது.
கோவை பொள்ளாச்சியில் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் கேரள மாணவர்கள் என்பதும், அவர்கள் அந்த ரிசார்ட்டில் விடிய விடிய சரக்கு கஞ்சா அடித்தும், விருந்து நடத்தி நடனமாடி சத்தம் போட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புகாரை அடுத்து கோவை எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான போலீசார் அந்த ரிசார்ட் தோட்டத்தில் உள்ளே நுழைந்தும், ஒரு டீம் தோட்டத்தை சுற்றி வளைத்தும் இருந்தது. அப்போது கஞ்சா,சரக்கு என விடிய விடிய மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தியதை அடுத்து கும்மாளம் போட்டு அத்துமீறலில் ஈடுபட்ட 162 பேரை வேனில் ஏற்றிசென்று, அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அங்கு அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. அவர்களுடன் இளைஞர்களும் கும்மாளம் அடித்தது தெரியவந்தது. இந்த சரக்கு பார்ட்டியில் இருந்தது மொத்தமும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.