கள்ள தொடர்பில் இருந்த மனைவியை கண்டித்த கணவன்-அதற்க்கு கொலைசெய்த மனைவி|Livecid
ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்ததை மனைவியை கண்டித்ததால், பழச்சாற்றில் விஷம் கலந்து கொடுத்தும், முகத்தை துணியால் அழுத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை நுாறடிச் சாலை, வட்டார போக்குவரத்து அலுவலக கால்வாயில் கடந்த 6ம் தேதி காலை சந்தேகிக்கும் வகையில் கிடந்த மூட்டையை போலீசார் பிரித்து பார்த்தபோது, 38 வயது மதிக்க தக்க வாலிபர், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லித்தோப்பு பெரியார் நகர் லாரி டிரைவர் கமலக்கண்ணன் என்பது தெரிய வந்தது. இவரது மனைவி ஸ்டெல்லாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கமலக்கண்ணன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஸ்டெல்லாவை நேற்று கைது செய்தனர். கொலை சம்பவம் எப்படி நடந்தது என சம்பவ இடத்தில் ஸ்டெல்லாவுடன் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் ஸ்டெல்லா அளித்த வாக்குமூலத்தில்; எனக்கும், செஞ்சியை சேர்ந்த கமலக்கண்ணனுக்கும் 10 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு மகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் கமலக்கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை, தனிமையில் இருந்த எனக்கு ஆண் துணை தேவைப்பட்டது. இதனால் எனது தங்கை மூலமாக எனக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் என் கணவன் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து போனார்கள். அவர்கள் வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் என் கணவனிடம் சொன்னதால் கமலக்கண்ணன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அவரது டார்ச்சர் அதிகமானதால், கொலை செய்ய திட்டமிட்டேன்.
எனது திட்டத்தை என் தங்கை ரெஜினாவிடம் கூறினேன். அவரது திட்டத்தின்படி கடந்த 4ம் தேதி என் கணவனை பிள்ளைச்சாவடிக்கு வரவழைத்து, பழச்சாற்றில் விஷம் கலந்து கொடுத்தேன். மயங்கி விழுந்த என் கணவனை, பெரியார் நகர் வீட்டிற்கு கொண்டு வந்தோம். அங்கு, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அப்படியே விட்டால் உயிர் பிழைத்து விடுவார் என்பதால், நானும், ரெஜினாவும் கமலக்கண்ணன் இரு கைகளை பிடித்து கொண்டார்.
என் தனகை ரெஜினா அவரது நண்பரான ரவுடி, சக்தி நகரை சேர்ந்த தமிழ்மணியை வரவழைத்தாள், அவர்கள் கமலக்கண்ணன் வாய் மற்றும் மூக்கில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்தார். பினனர் உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டோம். மறுநாள் 5ம் தேதி இரவு, தமிழ்மணி அவரது நண்பர்கள் இருவரை அழைத்து வந்து, கமலக்கண்ணன் உடலை சாக்குமூட்டையில் கட்டி, ஸ்கூட்டரில் கொண்டு சென்று, கால்வாயில் வீசி விட்டு சென்றதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து ஸ்டெல்லாவை கைது செய்த போலீசார், அவரது சகோதரி ரெஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை தேடிவருகின்றனர்.