முன்னாள் கஞ்சா வியாபாரி தற்போதிய அ.தி.மு.க., உறுப்பினர் ஓட ஓட விரட்டி கொலை-livecid.com
மதுரை மாவட்டம் வாழைத்தோப்பைச் சேர்ந்த இவர் முன்னாள் கஞ்சா வியாபாரி. அ.தி.மு.க., உறுப்பினரான இவர், சில தொழில்களை குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். இவர் மீது காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் வழக்கம் போல மாகாளிப்பட்டி ரோட்டில் நண்பர் அந்தோணி ஸ்டீபனை அவரது பாத்திர கடையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்மநபர்கள் பால்பாண்டி கொலை செய்ய விரட்டி சென்றனர்.
அப்போது உயிருக்கு பயந்து அருகில் இருந்த பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் புகுந்த பால்பாண்டியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பால்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பால்பாண்டி மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 1997-ம் ஆண்டு முருகன் என்பவரது மகனை கொன்ற வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த முன்விரோதத்தில் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.