புதுமண தம்பதியை எண்ணெய் ஊற்றி எரித்த பெற்றோர்..! மகாராஷ்டிர|www.livecid.com|livecid.com
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வருபவர்கள் மற்றும் ருக்மணி இவர்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி தம்பதியினரிடையே சிறிய சண்டை ஏற்பட்டு ருக்மணி தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு வாரம் தனிமையாக இருந்து மீண்டும் ருக்மணி செல்போன் மூலமாக அழைத்து, தன்னை வீட்டிற்கு வந்து அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பின்னர் தனது மனைவியை அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்றார் மங்கேஷ். அப்போது ருக்மணியின் தந்தை மற்றும் உறவினர்கள் ருக்மணியை அனுப்ப மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் ஆத்திரத்தில் இருந்த ருக்மணியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மங்கேஷ் மற்றும் ருக்மணி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. பின்னர் இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ருக்மணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.