பெண்களை கொன்ற சடலத்துடன் உடல் உறவு!
சைக்கோ கொலைக்காரனின் வாக்குமூலம்!! livecid.com(www.livecid.com)
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, யாரும் இல்லாத சமயத்தில் மீட்டர் ரீடிங் பார்ப்பவர் போல் வந்திருப்பதாக கூறி 7 பெண்களை அடித்துக் கொன்ற சைக்கோ கொலைக்காரனை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும், வீட்டில் தனியாக இருந்த 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இருவரின் தலையில் பலத்த காயத்துடன் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். அதில் சிவப்பு நிற இருசக்கர வாகனத்தில், அதே நிறத்தில் ஹெல்மட் அணிந்திருந்த நபரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபர், முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 42 வயதான கமருசமான் சர்கார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவனது நடவடிக்கை தீவிரமாக கண்காணித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை கூறினார்.
கமருசமான் அளித்த வாக்குமூலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்வதை கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து கமருசமான் செய்து வந்துள்ளான். இவன், எளிதாக தப்பிக்கக் கூடிய வீடுகளை தேர்ந்தெடுத்து, சரியாக மதிய நேரத்தில் சென்றுள்ளான். மீட்டர் ரீடிங் பார்ப்பவர் போல் வந்ததாக கூறி வீட்டிற்குள் நுழைவான். உள்ளே சென்றதும், வீட்டிலிருக்கும் பெண் தனியாக இருப்பதை உறுதிபடுத்திக் கொள்வான். உடனே, இரும்பு ராடால் தலையில் பலமாக அடித்து அவர்கள் ஓடாதபடி செய்வான். பின்னர் சைக்கிள் செயின் மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்வான். அவர்கள் இறந்த பின்னர் வீட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை திருடிச் செல்வான்.
இதுவரை 7 பெண்களை இதுபோல் கொலை செய்துள்ளான். அதில் 2 பெண்களை கொன்ற உடனேயே அவர்களின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளான். விசாரணையில் சிக்கிவிடாமல் இருக்க, அப்பெண்களின் மர்ம உறுப்பில் இரும்பு ராடையும் செறுகி சென்றுள்ளான். கடந்த மாதம் 30ம் தேதி 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொல்ல முயற்சித்துள்ளான். பின்னர் கமருசமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.