கணவனை கொன்று, தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி - அதிர்ச்சியில் அசாம்-(www.livecid.com)livecid.com
தினமும் குடித்துவிட்டு அடித்து உதைத்து துன்புறுத்திய கணவனை கொன்று, தலையுடன் காவல் நிலையத்தில் மனைவி சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள தால்பூரில் காவல் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்னர் இரவு பெண் ஒருவர் வந்தார். அவரது கையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அந்த பையை சோதனை செய்த போது ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஆணின் தலை இருந்ததை கண்டு, போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக இந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் என் பெயர் குணேஸ்வரி (48), என் கணவர் பெயர், முதிராம்(55). எங்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். எனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடந்தார். இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து, என்னை அடித்து துன்புறுத்துவார். என் பிள்ளைகளுக்காக அனைத்து கொடுமைகளை பொறுத்துக் கொண்டு வாழ்ந்தேன்.
ஆனால், சம்பவம் நடந்த அன்று, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், மிருகத்தனமாக என்னை கடுமையாக தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்து கணவரின் தலையை கத்தியால் அறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து குணேஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.