திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் வெட்டி கொலை-livecid.com,(www.livecid.com)
திருநெல்வேலி மாநகராட்சியில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் 23.07.2019 மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இத்தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலைகளுக்கு காரணம் சொத்து பிரச்னையா அல்லது கொடுக்கல், வாங்கல் பிரச்னையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.