போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூரிய அதிர்ச்சி ரிப்போர்ட்-பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு செல்கின்றனர்-livecid.com(www.livecid.com)

Admin
0
போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூரிய அதிர்ச்சி ரிப்போர்ட்-பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு செல்கின்றனர்-livecid.com(www.livecid.com)
கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களில்  பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு சென்றதாக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கான கருத்தரங்கு சமயபுரத்தில் தனியார் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது. 
கருத்தரங்கிற்கு திருச்சி போலீஸ் டிஐஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்  தலைமை தாங்கி பேசினார். இதில்,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜியாவுல் ஹக், சீனிவாசன் ,மற்றும் போலீஸ் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது  திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு சென்றதாக 40 சிறுவர்கள் , 154 சிறுமிகள், 119 இளம்பெண்கள் , 8 வாலிபர்கள் மாயமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
இதில் பெரும்பாலானோர் 18 வயதிற்குட்பட்டவர்களாக தான் உள்ளதாகவும். இதில், கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்துப்பேசிய அவர்,  கல்லூரி மாணவர்களிடையே தற்கொலையை தடுக்கவும், இளம் சிறுமிகள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை பற்றி தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளை காவல் துறையினருடன் சேர்ந்து தீர்வுகாண ஒவ்வொரு கல்லூரியிலும் போலீஸ் பெயரில் ஒரு குழு அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கல்லூரியில் மாணவ - மாணவிகளுக்கு தனித்தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் மட்டும் படிக்கும் கல்லூரியில் மாணவர்கள் பெயரிலும், மாணவிகள் மட்டும் படிக்கும் கல்லூரியில் மாணவிகள் பெயரிலும் ஒரு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் உள்ளவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளை கண்டறிந்து போலீஸ் துறையுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !