ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு புதிய வியூகம்....!livecid.com(www.livecid.com)#livecid

Admin
0
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு புதிய வியூகம்....!livecid.com(www.livecid.com)#livecid
ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு புதிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. 

த்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடம் விற்க மத்திய அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

ஏற்கெனவே இந்த நிறுவன பங்குகளை விற்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை எனவே புதிய உத்திகளை மத்திய அமைச்சர்கள் குழுவிடம் (ஏஐஎஸ்ஏஎம்) நிதியமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திடம் தனக்கு உள்ள பங்குகள் அனைத்தையும் (100 சதவீதம்) அல்லது 76 சதவீதத்தை விற்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்கவும் நிர்வாக மேலாண்மை கட்டுப்பாட்டை மாற்றவும் தயார் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 
ஆனால், இந்த அறிவிப்பு யாரையும் கவரவில்லை என்பதால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அரசிடம் மீதமுள்ள 24 சதவீத பங்குகள் மற்றும் அது தொடர்பான உரிமைகள், அதிகபடியான கடன் சுமை, விமான எரிபொருள் விலை நிலவரம், அன்னியச் செலாவணி பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கம் உள்பட பல காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதைக் கருத்தில் கொண்டு புதிய உத்திகளை நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளை விற்பனை செய்யும் அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !