புத்தரையே அத்திவரதர் என்ற பெயரில் இந்து கடவுளாக்கிய கதை-புத்த காஞ்சி- livecid.in - livecidtamil

Admin
2



புத்தரையே அத்திவரதர் என்ற பெயரில் இந்து கடவுளாக்கிய கதை-புத்த காஞ்சி- livecid.in

மெய்யை மெய் என்றும் பொய்யை பொய் என்றும் சொல்ல வேண்டும்

மகான் புத்தரையே அத்திவரதர் என்ற பெயரில் இந்து கடவுளாக்கி நம் கண் முன்னே மாற்றிய கதையை காண்கிறோம்.

Atti-என்ற பாலி வார்த்தையின் அர்த்தம் Bone என்பதாகும்,
Varatta- என்ற பாலி வார்த்தையின் அர்த்தம் More excellent raise path way என்பதாகும்,
இலங்கை மண்ணில் மகான் புத்தரின் எலும்பு மற்றும் பற்களைக் கொண்டு உறங்கும் நிலையில் புத்தர் உருவம் அமைக்கப்பட்டு மக்களால் வழிபட்டு வரப்படுகிறது. 
இந்த புத்தருக்கு அத்திவரதர் என்ற பெயர்.

இந்த அத்தி வரதர் என்ற பெயரை இலங்கையில் வைப்பதற்கு காரணம் இந்தியாவில் புத்தரை அத்திவரதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தினாலேயே இலங்கையில் அத்திவரதர் என்று அழைக்கப்பட்டார் அதைப் பற்றி பார்க்கலாம் .

இந்திரம் எனும் மொழி ஐந்திரம் எனும் மொழியின் திரிபாம்,அதாவது மகத நாட்டு சக்கரவர்த்தி திருமகன் சித்தார்த்தி சக்கரவர்த்தி அவர்கள் கல்லாலடியில் வீற்றி ஐம்பொறிகளை வென்றதால் ஐந்திரர் என்றும், ஐந்திரர் என்பதி உள்ள " ஐ " திரிந்து "இ" மாறி இந்திரர் என்றாகியது. இந்த இந்திரர் என்பது இந்திரன் என்றாகி அவரது காலத்தோர் அந்த இடத்திற்கு இந்திர விகாரம் என்றும் அவரது உற்சவம் கொண்டாடும் காலத்திற்கு இந்திர விழா நாள் இந்திர விழா கோலம் என்றும், இந்திர விழா கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வது அனுபவம் கொண்டு மழைக்கு முன் காட்சியளிக்கும் வானவில் இந்திரதனு சென்று அவரை எக்காலம் சிந்தித்து கொண்டாடும் கூட்டத்தாருக்கு இந்திரர்கள் என்றும், பூர்வ இந்த தேசத்தை பாரத கண்டம் என்றும் வழங்குவது உண்டு,

ஆதியில் இந்த தேசத்தவர்கள் சித்தார்த்த திருமகனை " வரதர்" என்று கொண்டாடி வந்தனர், அதாவது மக்களுக்கு அறத்தை போதிப்பது கண்டு வரதர் என்றும் பரதர் என்றும் அவர் பொதிந்துள்ள ஆதி வேதம் என்ற நூலுக்கு வரதன் மயந்த வரலாறு என்றும், அவரை கொண்டாடிய இந்திர தேசத்திற்கு வட பாரதம் தென்பாரதம் என்றும் கொண்டாடி வந்தார்கள் .
இத்தகைய கொண்டாட்டம் வரதர் என்றும் பெயரில் விசேஷமாக கொண்டாடாமல் இந்திரர் என்னும் பெயரிலேயே விழாக்களையும் ஆரவாரங்களையும் விசேஷமாகக் கொண்டாடி வந்த படியால் இந்த தேசத்து மக்களை இந்திர தேசத்து மக்கள் என்றும் இந்தியர்கள் இந்தியர்கள் என்றும் வழங்கப்பட்டது, அதனாலேயே இந்த தேசம் இந்தியா என்று வழங்கப்பட்டது,

Athi- என்ற சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் - மிக அதிகமாக மிகுதி என்று அர்த்தம்,
varthan -என்ற சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் வரம் அளிக்கும் (தேவர்கள்) கேட்டதைக் கொடுக்கும், விரும்பிய வரத்தை அடைதல் என்று பொருள்,
எனவே அத்தி வரதர் என்ற சமஸ்கிருத வார்த்தையில் அதிகப் பலனைக் கொடுக்கக் கூடியவர் என்ற பொருளில் புத்தரை, அத்திவரதர் ஆக்கி புத்தரின் நெற்றியில் நாமத்தை போட்டு, இந்து கடவுளாக்கி மக்களை மடையர்களாக்கி வணங்க வைத்து வருகிறார்கள்.

(ads)
பண்டிதமணி அயோத்திதாசர் சொல்வதைப்போல பிராமணர்கள் உள்ளதை உள்ளதென்றும் பொய்யை பொய் என்றும் ஒரு காலும் சொல்லமாட்டார்கள் மக்களை மடையர்களாக்கி அதிலேயே சவாரி செய்யக்கூடியவர்கள் பிராமணர்கள் ஒருகாலும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று குறிப்பிடுகிறார்,
(ads)
இந்திய மக்கள் ஒருகாலும் சிந்தித்து விடக்கூடாது எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் மனம்தான் என்பதை அவர்கள் உணர்ந்து விடக்கூடாது என்பதை நன்கு பிராமணர்கள் அறிந்த காரணத்தினால் தொடர்ந்து போய் பிரச்சாரங்களின் மூலம் இந்திய மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்கிறார்கள்,

அதனால்தான் நம் கண்களுக்கு முன்னே புத்தர் அத்திவரதர் ஆக காட்சியளிக்கிறார்.


EX:
புத்த சேரி தெரு =  புத்தேரித் தெரு ,(புத்த காஞ்சி


மறுமலர்ச்சிக் காலத்தின்போது புத்தருடைய சிலைகளை இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து நீர் நிலைகளுக்குள் வீசி விடுவது அன்றைய சைவ வைணவ சமய வெறியர்களின் வழக்கம். பெரும்பாலும் புத்தர் சிலைகளை உடைத்தும் சிதைத்தும் வீசி விடுவார்கள். இன்னும் சில துணிகரமான காலகட்டங்களின் புத்தர் சிலைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி அசிங்கப்படுத்தி அவற்றை பாடையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் வீசி வருவார்கள். அதை சாவு ஊர்வலம் போல நடத்துவார்கள்.

இவ்வாறு வீசப்பட்ட சிலைகள் நீர் வற்றும்போது வெளிப்படும். அவற்றை மக்கள் வணங்கத் தொடங்கினார்கள். சில சிதைந்த புத்தர் சிலைகளை நீர் நிலைகளின் கரைகளில் எடுத்து வைத்து சாமி கும்பிட்டார்கள். வற்றாத குளத்தில் இருக்கும் புத்தர் சிலைகள் எப்பொழுதாவது நீர் வற்றுப்போது வெளிப்படும். அப்போது மக்கள் அதிசயமாக பார்த்து வணங்குவார்கள். தினசரி காட்சி தரும் சிலைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை 'அத்திப் பூத்தாப்போல' தோன்றுவதால் அவரை 'அத்தி வரதர்' என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இதுதான் அத்தி வரதரின் வரலாறு.
ஏன் அவருக்கு வரதர் என்று பெயர் வந்தது?

வரதர் அல்ல அவர் பெயர். அவருடைய முழுமையான பெயர் 'வரதராஜர்'. புத்தர் ஒரு இளவரசர். அரசபரம்பரையில் இருந்து வந்தவர். அவர் வட நாட்டு ராஜா. வடக்கில் இருந்து வந்த அரசர் என்ற பொருளிலேயே அவருக்கு வரதராஜர் என்ற பெயர் வந்து சேர்ந்தது. இன்றைய வரதராஜர் கோயிலே ஒரு புத்தர் கோயில்தான். புத்த விகாரத்தில் இருந்த வரதராஜன் சிலையை அதாவது புத்தர் சிலையை தூக்கி குளத்தில் போட்டுவிட்டு அதை இந்து கோயிலாக மாற்றி விட்டார்கள். இதுதான் காஞ்சீபுறம் வரதராஜர் ஆலயத்தின் ஸ்தல வரலாறு.


குளத்தில் குடி இருப்பது சாட்சாத் அந்த புத்தர் பெருமான்தான். இன்றைக்கு அத்தி வரதர் என்கிற பெயரில் பிராமணர்கள் கொண்டாடி வருவதும் புத்தரைதான். தமிழகம் முழுவதிலும் இருந்து அல அலையாக மக்கள் தரிசித்து வருவதும் புத்த பகவானைத்தான் .
 

Tags

கருத்துரையிடுக

2கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !