25 ஆயிரம் லஞ்சம்.. திருச்சி டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை |www.livecid.com
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கீழவாளாடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த டிரஸ்ட்க்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற போலீஸ் தடையில்லா சான்று வாங்க வேண்டியிருந்தது. இதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜமாணிக்கம் லால்குடி டிஎஸ்பி செல்வமணியிடம் சான்றிதழ் கேட்டு அணுகினார்.
அப்போது டிஎஸ்பி செல்வமணி ரூ.25,000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத ராஜமாணிக்கம் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.
டிஎஸ்பி சிலம்பரசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி செல்வமணியை பிடிக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து கடந்த 19.7.2012 அன்று ராஜமாணிக்கம், டிஎஸ்பி செல்வமணி மற்றும் எஸ்ஐ சந்திரசேகரனிடம் ரூ.25,000 கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் இன்று நீதிபதி ரவிசந்திரன் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி செல்வமணிக்கு 2 ஆண்டு சிறையும், எஸ்ஐ சந்திரசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.