6 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை 48 வயது சிவராமன் மீது போக்சோ - www.livecid.com - Live CID
Post On:19.09.2019
Post On:19.09.2019
சென்னை கொரட்டூர், ரெட்டி தெருவில் வசித்து வருபவர் சிவராமன் (48) எலக்ட்ரிஷன் இவரது வீடு அருகே உள்ள வீட்டில் தனியாக இருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து மாணவி அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சிவராமன் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து போலீசார் சிவராமனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சிவராமன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானதாது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிவராமன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்...
Liveciddotcom Live CID www.livecid.com