கர்ப்பம் என கூறி 7 மாதமாக சிகிச்சை.. அரசு மருத்துவ மனை யின் லட்சணம் | கிருஷ்ணகிரி |www.livecid.com
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வேடியப்பன்- அஸ்வினி தம்பதி. இவர்களுக்கு 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அஸ்வினி கடந்த மார்ச் மாதம் கல்லாவி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். தொடர்ந்து7 மாதமாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி, மாதாந்திர பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்து வித சிகிச்சைகளும் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மாதாந்திர பரிசோதனைக்கு சென்றபோது அஸ்வினி வயிற்று வலி இருப்பதாக சொன்னதால் டாக்டர் ஸ்கேன் செய்ய சொன்னார். அதன்படி தர்மபுரி தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் வயிற்றில் குழந்தை இல்லை என்பதும், நீர்க்கட்டி இருப்பதும் தெரிய வந்தது. இதனால் அஸ்வினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் முறையிட்டதற்கு தெரியாமல் நடந்து விட்டது என்றனர். இதில் ஆத்திரமடைந்த அஸ்வினி உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனா சங்கர் தெரிவித்ததாவது; இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் இதற்காக ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
www.livecid.com | Live CID| liveciddotcom
www.livecid.com | Live CID| liveciddotcom