மோடியின் மனைவியும் மம்தாவும் கட்டித் தழுவினர் - மம்தா டெல்லி பயணம் பின்னணி?? www.livecid.com | Live CID
மேற்கு வங்க மாநிலம் அசன்சாலில் உள்ள கல்யாணேஸ்வரி கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக மோடியின் மனைவி ஜசோதாபென்னும், அவருடைய உறவினர்களும் வந்திருந்தனர். சாமி கும்பிட்டுவிட்டு குஜராத் திரும்புவதற்காக கொல்கத்தா விமானநிலையம் வந்து காத்திருந்தார் ஜசோதா. அப்போது, டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜசோதாவை சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். ஜசோதாவுக்கு ஒரு சேலையும், அவருடைய உறவினர்களுக்கு இனிப்புகளையும் மம்தா வழங்கினார்.
இனி, மேற்கு வங்கத்தில் உள்ள ஆலயங்களுக்கு வர விரும்பினால் தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும்படி மம்தா கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, தனது டெல்லி பயணம் வழக்கமானது. அரசியல் சட்டப்படியான கடமையைச் செய்வதற்காகவே மோடியை சந்திக்கப் போவதாகவும், மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தவும் செல்வதாக மம்தா கூறினார்.
www.onlinealltv.com All News