டிஜிட்டல் இந்தியாவில் ஜாதிய வன்கொடுமை | துணை போகும் திருச்சி மாவட்ட நிர்வாகம்|நடவடிக்கை எடுக்காத காவல்துறை | ஊராட்சி செயளர் துணை-உத்தமர்சீலி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தாலுக்காவில் கொள்ளிடம் காவல்நிலையத்திற்க்கு உட்பட்ட உத்தமர் சீலி (உத்தமசேரி) கிராமத்தில் இந்து-ஆதிதிராவிடர் பறையன் வகுப்பைச் சேர்ந்த திரு.பாலச்சந்திரன் என்பவரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த உத்தமர்சீலி. 1. கலை (எ)கலைச்செல்வன் 2.மணிவண்ணன் 3.சிவமணி 4.சுப்பிரமணி 5.நடராஜன் ஆகியோர் கடந்த 17.11.2019 அன்று பாலச்சந்தரன் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்க்கு வேலையை ஆரம்பித்தபோது இவரின் நில உரிமையில் சட்ட விரோதமாக மேல்சாதியை சேர்ந்தவர்கள் தலையிட்டு இவரை பிணம் எரிப்பது, தப்பு அடிக்கும் வேலை செய்தால்தான் இவ்வூரில் வாழமுடியும் இல்லையென்றால் நிலத்தை புடிங்கிக் கொண்டு அடித்து விரட்டி விடுவோம் என்று சாதிபெயரை சொல்லி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உனக்கு நாங்கள் ஒரு நாள் அவகாசம் தருகிறோம் யோசித்து சொல் என்று சொன்னார்கள்.
அடுத்த நாள் 18.11.2019 காலை மேற்படி எதிரிகள் மயானத்தில் குழியை வெட்டுவதற்கு கட்டாயப்படுத்தியும்,பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் தாழ்வு படுத்தும் வகையில் வேண்டுமென்று அவமதித்து அச்சுறுத்தி சாதிபெயரை சொல்லி திட்டியும் மற்றசமூக மக்களிடம் பகை உணர்வை தூண்டிவிட்டு சமூக பொருளாதார கட்டுப்பாட்டை செய்யப்போவதாக மிரட்டியும் குற்றம் செய்துள்ளனர்.
மேற்படி பாலச்சந்தர் அவ்வூரைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் ராஜகோபிலிடம் குடிநீர் இணைப்பிற்கு வைப்புத் தொகை செலுத்த சென்றார் , ஆனால் அந்த ஊராட்சி செயளர் உன்னிடம் பணம் வாங்கவும் முடியாது ,குடிநீர் இணைப்பும் தரமுடியாது ஊரில் கட்டுப்பாடு போட்டுறுக்காங்க என சொல்லி மறுத்துள்ளார். சாதி வெறிக்கு இந்த ஊராட்சி செயளர் துணைபோவது குறிப்பிடதக்கது.
இது குறித்து கடந்த 21.11.2019 அன்று கொள்ளிடம் காவல்நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் DSPஇலால்குடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP, ஆகியோரிடம் நேரிலும் தபால் மூலமாக புகார் அளித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகையால் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்,தேசிய மாநில sc/st ஆணையத்திடம் புகார்மனு அனுப்பப்பட்டது. அனுப்பட்ட கடிதத்திற்கும் எந்த நடவடிக்கை இல்லை என்பது குறிப்பிடதக்கது.
SC/ST வன்கொடுமை சட்டத்தில் கீழ்அந்த சாதி பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் என மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சாதிய பயங்கரவாதியை கைது செய்யமா காவல் துறை? அரசு அதிகாரி துணை போவதை தண்டிக்குமா மாவட்ட நிர்வாகம்??
தீண்டாமை ஒரு பாவச்செயல். வன்கொடுமை குற்றவாளிகளை சாதிய பயங்கரவாதிகளாக அறிவித்திடுக.