6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை வழக்கிய நீதிமன்றம் - கோவை
கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் என்பவனுக்கு குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25-(2019)ம் தேதி 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் தெள்ளத்தெளிவாக நிரூபணமானதால் அவர் குற்றவாளி என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சத்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் பிரிவு 302 கீழ் தூக்குதண்டைனை வழக்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறுமியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.