குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மைக்ரோ சாஃப்ட் CEO கடும் எதிர்ப்பு! Livecid
இந்திய குடியுரிமை சட்டத்தை மைக்ரோ சாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா எதிர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் அதிக அளவில் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. எனினும் மத்திய அரசு அதனை கண்டு கொள்வதாக தெரிவதில்லை. நாடெங்கும் நடைபெறும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் கூட திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.
இந்நிலையில் பல முக்கிய பிரமுகர்களும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கணினி உலகின் ஜாம்பவான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் குடியுரிமை சட்ட எதிர்ப்பு உலகின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. குறிப்பாக குடியுரிமை சட்டம் மிகுந்த மன உளைச்சளுக்கு உள்ளாக்கியுள்ளது.
வங்கதேசத்தினை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் குடியேறி, இன்ஃபோசிஸ் சிஏஓ ஆவதையே நான் விரும்புகிறேன். நான் இந்திய பாரம்பரியத்தை கொண்டவன் என்பதும், இந்தியாவின் பன்முகத்தன்மையும் தான் இன்று என்னை பெரிய ஆளாக்கியுள்ளது. அதற்கு ஒரு ஆபத்து எனும்போது வருத்தம் அளிப்பது இயற்கைதான்” என்று தெரிவித்துள்ளார்.
சத்யா நாதெள்ளா ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
www.livecid.com