3 வயது பெண் குழந்தை கற்பழித்து கொலை உ.பி யை உறைய வைத்த சம்பவம் - livecid -india _ www.livecid.com
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகள், ஏன் பெண் குழந்தைகள் கூட ஒரு சில கயவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை அங்குமிங்கும் தேடினர். பின்னர் பக்கத்து வீட்டில் தேடிய போது, குழந்தை இறந்த நிலையில் ஒரு கோணிப்பைக்குள் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர்.
‘குழந்தை கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீசார் தெரிவித்தனர்.
3 வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
www.livecid.com liveciddotcom Live CID
9488658639 Editor Buddha Prakash