காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி திருமகள் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (44). இவருக்கு விமாலாராணி(37) என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ்(14) என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்கு முன்பே விமலா ராணிக்கு ராஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், பெற்றோரின் விருப்பப்படி தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பின்னரும் ராஜாவுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்த விவகாரம் அறிந்த தங்கவேலு, மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 28ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விமலாராணியை, தங்கவேல் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த விமலாராணி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து, தங்கவேலுவின் கழுத்தில் வெட்டினார். அதில் ரத்த வெள்ளத்தில் அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.. பின்னர், இரவு 10 மணிவரை சடலத்தை வீட்டின் படுக்கை அறையில் மறைத்து வைத்துள்ளார்.
அதன்பின் தனது கள்ளகாதலன் ராஜாவை வரழைத்து, செங்கல்பட்டு அருகே தொழுப்பேடு பகுதியில் உள்ள காட்டில் சடலத்தை போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தங்கவேலுவின் செல்போனில், அவரது அண்ணன் சக்திவேல் அழைத்துள்ளார். அப்போது, செல்போனை எடுத்த விமலாராணி, தனது மகனுக்கு ஆன்லைன் வகுப்பு நடப்பதாக கூறி, தொடர்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மீண்டும் அவர் தொடர்பு கொண்டார்.
ஆனால், செல்போனை எடுக்கவில்லை. மீண்டும் அவர் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆப் வந்தது. இதனால் சந்தேகமடைந்த சக்திவேல், தங்கவேலுவை பற்றி விசாரித்தார். ஆனால் எவ்வித தகவலும் இல்லை.
இதையடுத்து,மணிமங்கலம் போலீசில், தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, ஹரிஷ்ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 10 ,மாலை விமலாராணி, அவரது மகன் ஹர்ஷாராகவ் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது, தனது கணவர் தங்கவேலுவுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த ஜூலை 28ம் தேதி அரிவாள்மனையால் கழுத்தில் 2 முறை வெட்டி கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதனையடுது்து, அவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்