*5வயது பெண் குழந்தை நரபலி – தந்தை, சாமியார் கைது*
அதிர வைக்கும் அசாம்-livecid.in
5 வயது பெண் குழந்தை கடத்தபட்டு நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அசாம் மாநிலம் சாரீடியோ மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 9ம் தேதி இரவு சாரீடியோ மாவட்டத்தின் தேயிலை தோட்டத்து வீட்டில் சகோதரியுடன் ஐந்து வயது பெண் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் கண்விழித்த சகோதரி, தங்கைய காணாது தேடியிருக்கிறார். எங்கு தேடியும் தங்கை கிடைக்காததால் செப்ரை போலீசில் சகோதரி புகாரளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் திவீர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர். அப்போது, சிங்லு ஆற்றங்கரை அருகே குழந்தையின் சடலம் கிடப்பது தெரியவந்தது. விசாரணையில் அது காணாமல் போன குழந்தைதான் என்று தெரியவந்தது.
உயிரிழந்து கிடந்த குழந்தையின் உடலில் சிவப்பு துணி சுத்தப்பட்டிருந்தது. சாம்பல் உள்ளிட்ட தாந்ரீகம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அங்கு கிடந்துள்ளன.
இதையெல்லாம் வைத்து குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்த போலீசார், உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தந்தை உள்ளிட்ட 10 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.