கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை கைது செய்ய வேண்டும் என்று கூக்குரல் இருக்கிறது, ஆனால் அது இன்னும் நடந்தபாடில்லை, உங்களால் முடிந்தால் என்னை கைது செய்து கொள்ளுங்கள், ஆனால் இந்த தமிழ் பெண்ணின் வளர்ச்சியை யாராலும், ஒருபோதும் தடுக்க முடியாது, நான் ஒரு சாதனையாளர் என்பதால்தான் நான் குறி வைக்கப்படுகிறேன் என மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் பேசி வெளியிட்டுள்ள வீடியோ மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சு முழுக்க முழுக்க தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலின சமுதாய மக்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளால் கொடுத்துள்ள புகாரை அடுத்து அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் போலீசாருக்கு சவால் விடுக்கும் வைகயில் பேசி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது,
நான் நாட்டின் பாரத பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களும் வைக்கும் கோரிக்கை, முதலில் பெண்களுக்கு எதிராக பேசுகிற ஒவ்வொரு ஆண்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறையை தடுக்க மோடி விரைவில் சட்டம் கொண்டு வரவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே என்னை கைது செய்ய வேண்டும் என கூக்குரல்கள் தமிழகத்தில் எழுகிறது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தபாடில்லை. இனி அது நடக்கவும் போவதில்லை, பல ஆண்கள் என்னை அடைய விரும்புகிறார்கள், தமிழ் சினிமாவில் சில பெண்கள் அவர்களுக்கு அடிபணிந்து போவதால் அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ச்சி அடைய முடிகிறது. ஆனால் தமிழ் பெண்ணான என்னால் அப்படி செய்ய முடியவில்லை,
வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு ஒரு பெண்ணுக்கு எதிராக அடக்குமுறைகள் இருந்திருக்காது. பரவாயில்லை என்னை கைது செய்து கொள்ளுங்கள். ஏன் மகாத்மா காந்தி சிறைக்கு செல்லவில்லையா.? ஜவஹர்லால் நேரு சிறைக்கு செல்லவில்லையா.? எனக்கு எதிராக என்ன முயற்சி எடுத்தாலும் அது நிறைவேறாது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், எனக்கு எதிராக அவதூறு பரப்புகின்ற ஆண்களை முதலில் நீங்கள் கைது செய்யுங்கள். இதுதான் பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நான் வைக்கிற கோரிக்கை. நீங்கள் எத்தனை தடைகள் போட்டாலும் நான் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பேன். என் சாதனையை யாராலும் தடுக்க முடியாது இவ்வாறு அவர் பேசியுள்ளார். livecid.in
தொகுப்பு
CHIEF REPORTER
PRSANTH.S