சொந்த சகோதரியை மிரட்டி அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த சகோதரனை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். பல ஆண்டுகளாக நேர்ந்த கொடூரத்தை ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்கள் கற்பழிப்பு, வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவது போன்ற எண்ணற்ற வன்முறைகள் பெண்களுக்கு எதிராக நடந்த வண்ணம் உள்ளன. இதை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையில் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இது ஒருபுறமிருக்க சில நேரங்களில் பெண்கள் தங்கள் சொந்த குடும்பத்தினராலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உடன்பிறந்த சகோதரனே அக்காவை மிரட்டி, பாலியல் வன்புணர்வு செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரம் இப்போது வீதிக்கு வந்துள்ளதால், இதைக் கேட்டு, அடக்கொடுமையே இப்படியெல்லாமா நடக்கும் என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் சேர்ந்த பெண்ணொருவர் (48) திருமணமான நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது இளைய சகோதரரும், திருமணம் செய்து கொள்ளாமல் அதே வீட்டில் வசித்து வருகிறார். அக்காவும் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சொந்த சகோதரி என்றும் பாராமல் அந்தப் பெண்ணின் தம்பி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அடிக்கடி சொந்த அக்காவை வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
இது பல ஆண்டுகளாக நடந்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தொல்லை அதிகரித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது தம்பியால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்து கதறினார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது சகோதரர் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உண்மை என தெரிய உறுதியானது.
இந்நிலையில் அந்த நபர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமையில் தம்பி ஈடுபட்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.