தருமபுரி அருகே பிறந்து ஏழே நாளில் மர்மமான நிலையில் உயிரிழந்த பெண் சிசுவின் உடலை வருவாய்த்துறையினர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல்- தேன்மொழி தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஏழே நாளில் 3-வது பெண் சிசு உயிரிழந்த நிலையில், மோட்டுபட்டி கிராமத்தில் குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், கிராம செவிலியர் அளித்த புகாரின் பேரில் உடலை வருவாய்த்துறையினர் தோண்டி எடுத்தனர்.
குழந்தை கொலை செய்யப்பட்டதா என தேன்மொழியின் தாயார் உமாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைக்கு உமா எருக்கம்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உமாவை காவல்துறையினர் கைது செய்தனர்.