சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடு, கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்லபாம்பு புகுந்ததாக சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் விஜயகுமார், ஜீவா, அலெக்சாண்டர், சதீஷ்குமார்,பெரியசாமி, உள்ளிட்ட வீரர்கள் விரைந்து வந்து சமயபுரம் கோயில் வளாகத்தில் காணிக்கை செலுத்தும் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், பாம்பு அங்கும் இங்கும் ஓடியது. சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப்பின் பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் பாம்பை சாக்கு பையில் அடைத்து வயல்வெளி காட்டுப்பகுதியில் பாம்பை பத்திரமாக விட்டனர்