உயிரை துச்சமென நினைத்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய காவலர் - தேனி எஸ்பி பாராட்டு - Livecid
தேனி மாவட்டம் காவல் துறை செய்தி
11.08.2021
குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்ய முயன்றவரை போடி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் 1035-திரு.S.சுரேஷ் என்பவர் தன் உயிரை துச்சமென நினைத்து வீட்டின் கதவை உடைத்து அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
யாரும் முன்வராத நிலையில் துரிதமாகவும், துணிவுடனும் செயல்பட்டு வீட்டினுள் திறந்த நிலையில் இருந்த எரிவாயு சிலிண்டரை திறம்பட கையாண்டு அப்பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலரின் இச்செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இச்செயலானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பாராட்டை பெற்று வருகிறது.
Livecid Network காவலர் சுரேஷ் அவர்களை பாராட்டுகிறது.
#goodworkdone #thenidistrictpolice #thenidistrict #szsocialmedia1 #TNPolice