தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் மொயினாபாத் மண்டலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட (RMP)மருத்துவராக இருந்து வரும் பெண் ஒரு சிறிய கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கிராமத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அந்தப் பெண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பெண் பார்ப்பதற்கு அழகானவராக இருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த பதி பிரசாத் ரெட்டி என்ற இளைஞர் அந்தப் பெண்ணை அடைய வேண்டுமென முயற்சி செய்தார். அதற்காக தனக்கு உடல்நலக் குறைவு என்ற போர்வையில் அவரது மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அந்தப் பெண்ணிடம் சிகிச்சை எடுப்பது போல எடுத்துக்கொண்டார். ஏதாவது பிரச்சனை என்றால் சந்தேகம் கேட்க தொலைபேசி எண்ணை கொடுத்து உதவுமாறு அந்த இளைஞர் பெண் மருத்துவரிடம் தொலைபேசி எண்ணையும் கேட்டார்.
அந்தப் பெண்ணும் தயங்கமால் தனது மொபைல் எண்ணை கொடுத்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற பிரசாத் ரெட்டி, அந்தப் பெண்ணுக்கு சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு கூட அடிக்கடி கால் செய்ய ஆரம்பித்தார், பின்னர் இரவு நேரங்களில் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து ஆபாஞமாக குறுஞ்செய்திகளை அனுப்பினார். ஆனால் அந்த பெண் மருத்துவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நேரடியாக அந்தப்பெண்ணின் மருத்துவமனைக்கு சென்றார, இவரைப் பார்த்ததும் அந்தப் பெண் மருத்துவர், "ஸநீ ஏன் இங்கே வந்தாய் " என கேட்டு சத்தம்போட்டார். உடனே அந்த இளைஞர், நான் உன்னை விரும்புகிறேன், நான் உன்னை காதலிக்கிறேன் என கூறினார். மேலும், உனக்கு ஒரே ஒரு முத்தம் தரவேண்டும், ஒரு முத்தத்திற்கு 25ஆயிரம் ஆனாலும் பரவாயில்லை, உன்னுடைய கிளினிக்கிற்கு 5 மாத வாடகையை தரவும் நான் தயாராக இருக்கிறேன் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதை கேட்டு அதிரிச்சியடைந்த அந்த பெண், உடனே கிளினிக்கை விட்டு வீட்டுக்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோர்களிடம் கூறினார், அவர்கள் கோபத்துடன் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கு வந்து தேடினார், ஆனால் அவர் அங்கு இல்லை, அதனையடுத்து காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரசாத் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.