குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம் - சிறையில் சிக்கிய 4 கேடிகள் - காஞ்சிபுரம்-பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையம்
காஞ்சிபுரம் ஜவகர்லால் தெருவை சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் குணசீலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த பெண்ணுக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். இதனையடுத்து தொடர்ந்து அவரிடம் பேசி நாளடைவில் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், குணசீலன் மேல்கதீர்பூரில் உள்ள தனது பூர்வீக சொத்துக்களை காண்பிப்பதாக கூறி, அந்த பெண்ணை தனது காரில் அழைத்து சென்றபோது குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்த உடனே மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து, தனக்கு சொந்தமான பம்புசெட் பகுதியில் வைத்து 4 பேரும் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் அந்த இளம்பெண் அலறியுள்ளார்.
பெண்ணில் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் கூடவே 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த இளம்பெண் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். இதனையடுத்து, ஜெயநேசன், அஜித்குமார் , குணசேகரன், குணசீலன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.