அப்போது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தும் இடத்தில் அவர் கையில் வைத்திருந்த பரோட்டா பார்சலை அமர்ந்து சாப்பிட துவங்கினார். தாமோதரன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் நெஞ்சை கையை வைத்து அழுத்தி கொண்டு சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பரோட்டா சாப்பிடத் துவங்கினார், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்சு வலியானது மாரடைப்பாக மாறியதனால் தாமோதரன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்தார்.
பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தாமோதரன் கீழே விழுந்ததைக் கண்டு அருகில் சென்று அவரை தூக்கி முதலுதவி அளிக்கும் முயற்சி செய்தனர். பொழுது அவர் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறுகையில் மேலும் இது குறித்து திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குறிப்பாக கடந்த சில நாட்களாக தரமற்ற உணவு உண்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணி பகுதியைச் சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது. ஆரணி அருகே தொண்டைக்கட்டு ஊராட்சிக்குட்பட்ட ஆனந்த் என்பவரின் மகள் லோசினி தந்தூரி பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 வயது பெண் குழந்தை உயிரிழந்தார். மேலும் அந்த ஓட்டலில் தந்தூரி பிரியாணி சாப்பிட்ட 20 நபர்கள் வாந்தி மயக்கத்துடன் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. Livecid.in