சென்னை அம்பத்தூரில் 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது.அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை.
சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் சோதனை சாவடியில் ஆய்வாளர் ராமசாமி உதவி ஆய்வாளர்கள் சையதுமுபாரக்,பாஸ்கர்,ரமேஷ்ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 2 நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது கட்டைப்பையில் வைத்திருந்த 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கனேஷ்,ராஜகண்ணா என்பது தெரியவந்து மேலும் விசாரனையில் பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக தகவல் தொரிவித்தனர் பின்னர் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி மற்றும் காவலர்கள் மாறுவேடத்தில் சென்று கஞ்சா விற்பனை செய்யும் லட்சுமி மற்றும் ஆகாஸ் ஆகியவர்களை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 10.5 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர் மேலும் கஞ்சா பேக்கிங் செய்யப் பயன்படும் கருவி பிளாஸ்டிக் கவர், 4 செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Reporter : Ezhumalai