மாதவரம் அடுத்த புழலில் பயங்கரம்
முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது
புழல் அடுத்த புத்தகரம் சுபாஷ் நகர் 1வது பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் இரவு புழல் போலீசுக்கு தகவல் வந்தது.தகவலின்பேரில் புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தி இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(வயது 27) என்பவர் தெரியவந்தது .
இவருடைய உறவினரான தாய் மாமன் முருகவேல் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புழல் அடுத்த புத்தகரம் சுபாஷ் நகரில் கட்டிட வேலைகள் செய்துவந்தார்.
தாய்மாமன் முருகவேல் என்பவரிடம் குடிபோதையில் மைத்துனர் ஆறுமுகத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு கைகளால் தாக்கியதாக இதுபற்றிய சம்பவங்களால் மனமுடைந்த ஆறுமுகம், முருகவேல் சகோதரான மாணிக்கம் என்பவரிடம் கூறினார்.
இதனை அறிந்த அவருடைய மகன் அஜித்குமார்(வயது21) அவருடைய நண்பரான ராஜேஷ்குமார் (வயது19)அசோக்வயது(வயது21) ஆகியோர் சம்பவ சென்று ஆறுமுகத்திடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக விட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். என விசாரணையில் தெரியவந்தது வழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3பேரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Reporter: Ezhumalai