திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனையில் கணக்கில் வராத 53130 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஊழில் ஒழிப்பு வாரம் கடந்த 27-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்பையில் அதிகம பணம் புழங்கும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்
தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச் செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர், மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அ்ப்போது கணக்கில் வராத 53 ஆயிரத்து 130 ரூபாய் மற்றும் ஆவணங்களை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சென்றதும் தங்கள் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர்