சென்னை திரு வி க நகர் மாநகராட்சி விளையாட்டு திடலில் தனியார் டெலிவரி ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா நெய் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி வயது 37.
இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.
குடிக்கு அடிமையானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் மூலம் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
இதையடுத்து பெரம்பூரில் நண்பர் சேகருடன் தங்கி தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் மணி.
இந்த நிலையில் நேற்று இரவு பல்லவன் சாலை மாநகராட்சி விளையாட்டு திடலில் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.தகவலறிந்த திருவிக நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.