மணலி நெடுஞ்சாலையில் துப்புரவு தொழிலாளர் இருவர் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு
சென்னை மணலி நெடுஞ்சாலையில் உள்ள எஸ் எம் நகர் அருகே இன்று அதிகாலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது அச்சாலை வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது
இன்று காலையில் மணலி நெடுஞ்சாலையில் பெண்கள் துப்புரவு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென சாலையில் இருந்த இரண்டு பெண்கள் மீது மோதியது இதில் திருவொற்றியூர் கிராம தெரு பகுதியை சேர்ந்த ரதியம்மாள் என்பவர் கை மற்றும் கால்களில் அடிபட்ட நிலையில் நேஷ்னல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேலும் எண்ணூர் பகுதியைச் சார்ந்த நிர்மலா என்பவர் ஆபத்தான நிலையில் சென்னை ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விபத்து நடந்த உடனே கண்டெய்னர் லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனர் தலைமறைவாகி விட்டனர்
இச்சம்பவம் அறிந்த ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் மணலி நெடுஞ்சாலையில் ஒன்று கூடினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Reporter : Ezhumalai