சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் திருவள்ளூருக்கு வருகை தந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு - காவல் நிலையத்திலும் ஆய்வு - Livecid - crime news gallery

User2
0


சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் பூந்தமல்லி ,வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு வருகை தந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. தீயணைப்புத்துறை வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து, தாலுக்கா காவல் நிலையம், மகளிர் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.


25 ஆண்டுகள் தீயணைப்பு வீரர்களாக பணிபுரிந்தவர்களை தீயணைப்பு சிறப்பு நிலைய ்அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து பெற்றுத் தந்தமைக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனராக இருக்கும் திரு.சைலேந்திரபாபு அவர்கள் இன்று காலை சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு, பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகை தந்தார். திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகம் வந்த போது அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். 25 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர்களாக பணி புரிந்தவர்களை சிறப்பு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் தெரிவித்து பெற்றுத் தந்தமைக்கு திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூர்  தாலுக்கா காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் அதிகாரிகள் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.  அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் பேசிய அவர்,  தங்களது குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறிய அவர் உள்ளே சென்று சிறையை பார்வையிட்டார்.


அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.  அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்திலும் குறைகளை கேட்டறிந்த அவர், காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குழந்தைகளிடமும் கலந்துரையாடி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.  மேலும் சிலம்பாட்டம் ஆடிய சிறுவனுக்கும் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டினார். எந்த குறையாக இருந்தாலும் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !