எம்.கே.பி.நகர், அக்,12 சென்னை வியாசர்பாடி பகுதியில் மது வாங்க பணம் கேட்டு, இல்லையென்ற ஆத்திரத்தில் பெயிண்டரை பீர் பாட்டிலால் குத்திய இரண்டு ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்,
சென்னை, வியாசர்பாடி கரிமேடு முதல் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பார்த்திபன்(31) , இவர் பெயிண்டர் நேற்று இரவு வேலை முடிந்து எருக்கஞ்சேரி பாட்சா ஒயின்சாப்பில் மது வாங்கி குடித்து விட்டு வெளியில் வந்தர்,
அப்போது, அதே பகுதியை சேர்ந்த மூன்று ரவுடிகள், பார்த்திபனிடம் மது வாங்க காசு கேட்டு தகராறு செய்தனர், பார்த்திபன் பணம் இல்லை என்றது, பீர்பாட்டிலை உடைத்து அடித்ததில், தலை, மூக்கு, இடது கன்னம், வலது கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டன,
இதனை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் பார்த்திபன் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சென்னை, வியாசர்பாடி பெரியார் நகர், கருணா நிதி சாலை பன்னீர் செல்வம் தெருவை சேர்ந்தவர் மோகன், இவரின் மகன் மகேஷ் குமார்(21), அதே பகுதி அண்ணா சாலை, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (எ) அய்ப்பா மணி(22)ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன, தலைமறைவாக உள்ள வின்சென்ட்டை தேடி வருகின்றனர்.கைதான இரண்டு பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.