பெரம்பலூர் அருகே மருமகளுடன் தொடர்பு வைத்திருந்த தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர் .
பெரம்பலூர் மாவட்டம் , ஆலத்தூர் தாலுகா , எலந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 50 ) இரும்பு பட்டறை நடத்தி வந்தார் . இவருக்கு தையல்நாயகி மற்றும் ராணி என இரு மனைவிகள் இருந்தனர். தையல்நாயகிக்கு வேலவன் (21 ) வெற்றிவேல் (19) இரு மகன்களும் ராணி என்பவருக்கு கதிர் (14) மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
சிறுவாச்சூர் கிராமத்தில் தையல்நாயகி மட்டும் தனியாக வசித்து வருகிறார் . ராணி மற்றும் 3 மகன்க ளுடன் எலந்தலப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் முருகன் வசித்து வந்தார் . இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வேலவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து , அதே வீட்டில் வசித்து வந்தனர் .
இந்நிலையில் 27.10.2021 ல் வேலவன் , அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேலவன் அடிகடி கஞ்சா எடுத்து கொள்வார் என்பதும் குறிப்பிடதக்கது.
இது தொடர்பாக முருகனுக்கும் வேலவனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த வேலவன் வீட்டின் வெளியே வைத்து முருகனை கத்தியால் குத்தியுள்ளார் இதில் கழுத்து , கை மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்து பாடாலூர் போலீசார் அங்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர் . இதில் வேலவனின் மனைவிக்கும் முருகனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும் , இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரி வித்தனர் . இதையடுத்து முருகனின் பிரேத பரிசோதனைக் காக பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேலவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா என்கின்ற போதை பொருள் அதிகமாக கிடைக்கிறது , இந்த கஞ்சா போதைக்கு அடிமையாகி சிலரும் இது போன்ற கொலை செய்கின்றனர். பெரம்பலூர் மாவட்ட காவல் துறை இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை , கண்டு கொள்ளுமா? கஞ்சாவை தடை செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Chief Reporter: Prashanth