ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆரான், அவருடைய மகன் சாமுவேல் (வயது 21). இருசக்கர வாகன மெக்கானிக்.பிளஸ்-1 மாணவியின்(வயது 16) பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அவரது வீட்டுக்கு சென்றார் சாமுவேல். அப்போது அவருக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதனை உறவினர்கள் கண்டித்தும் இருவரின் பழக்கம் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில்,சாமுவேல் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பக்கத்துக்கு ஊரில் உள்ள கரும்புத் தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர்.பின்னர் சாமுவேல் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
Reporter: Ezhumalai