காசிமேட்டில் படகுகளில் இருந்து ஜிபிஎஸ் கருவிகளை திருடிய 2 பேர் கைது - Livecid - Crime News Gallery - Chennai Crime - www.livecid.in - காசிமேடு Livecid
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் இருந்து ஜிபிஎஸ் கருவி மற்றும் டீசல் போன்ற பல பொருட்கள் திருடு போவதாக மீனவர்கள் தகவல் தெரிவித்து வந்தனர்
இந்நிலையில் சுதர்சனம் என்பவர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகிலிருந்து ஜிபிஎஸ் கருவி மற்றும் விஎச்எப் (VHF)ஒயர்லெஸ் கருவி ஆகியவை திருடப்பட்டு இருப்பதாக N4 காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வார்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக திரிந்த வாலிபரை பிடித்து மீனவர்கள் காவலர்களிடம் ஒப்படைத்தனர் பின்னர் விசாரணையில் ஜிபிஎஸ் கருவிகளை திருடியவர் என்பது தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய காசிமேடு பகுதியைச் சார்ந்த சுதாகர் அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி மற்றும் விஎச்எப் வயர்லெஸ் கருவி ஆகியவற்றையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Reporter : Ezhumalai