திருவேற்காடு நகராட்சியில் காலி நிலத்திற்கு வரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் பெண் உதவியாளர் கைது
திருவேற்காட்டை சேர்ந்த நபர் அங்குள்ள தனக்கு சொந்தமான காலி நிலத்திற்கு காலி நில வரி சான்றுக்காக திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார்.
மனுவை பரிசீலனை செய்து வரி விதிப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கேட்டதையடுத்து மனுதாரர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சென்னை பிரிவு 2 அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ருபாய் நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினார்கள் அப்போது நகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவில் வருவாய் ஆய்வாளர் யுவராஜ் உதவியாளராக பணிபுரியும் தற்காலிக ஊழியர் தேன்மொழி என்பவர் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை வாங்கி வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து லஞ்ச பணமாக வாங்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். காலி வீட்டு மனைக்கு வரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் அவரது பெண் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Reporter : Ezhumalai