மூத்தமகள் விஸ்மயா தங்கையை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது , வீட்டுக்குள் மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி கிடப்பதைக் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரவூர் போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து ஜித்துவை தேடி வந்தனர் , தேடுதலின் போது போலீஸ் பரவூர் அடுத்துள்ள காக்க நாடு பகுதியில் சுற்றித்திரிந்த ஜித்துவை பரவூ போலிசார் நேற்று கண்டுபிடித்தனர்.
போலீசிடம் பிடிபட்ட ஜித்துவிடம் நடத்திய விசாரணையில், வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். அப்போது எனது கைகள் வின் கட்டுகளை அவிழ்க்க அக்காவிடம் கூறினேன். அக்கா விஸ்மயா கை கட்டுகளை அவிழ்த்து விட்டார். அப்போது எனது காதலை அக்கா கெடுத்து விட்டதாக கூறி அக்காவிடம் சண்டை போட்டேன், என்னிடம் அவளும் சண்டை போட்டாள்.
ஒரு கட்டத்தில் கோபம் வந்துவிட்டது. வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அக்கா உடலில் சரமாரியாக குத்தினேன். இதில் சம்பவ இடத்தில் அக்கா இறந்து விட்டார். இறந்தது தெரிந்தவுடன் அவர் உடலில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்து எரித்தேன். உடல் முற்றிலும் தீயில் கருகிய பின்பு வீட்டை விட்டு வெளியேறினேன்’ என்று பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.