ரவுடி குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது_காஞ்சிபுரம்_livecid crime news gallery

User 1
0



காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய  எல்லைக்குட்பட்ட போந்தூர் கிராமத்தை சேர்ந்த  தலைமறைவு எதிரியும், குணாவின் கூட்டாளியுமான போந்தூர் சேட்டு ( 48 )த/பெ.சுப்பிரமணியன், மற்றும் மற்றொரு கூட்டாளியான மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு ( 38 )த/ பெ.சுப்பிரமணி என்பவரையும் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் கைது செய்தனர். பிரபுவிடமிருந்து அவரது சொகுசு கார்களான 2 இன்னோவா, 1 பென்ஸ், 1 ஸ்விப்ட் என நான்கு கார்கள் மற்றும் கார்களில் வைத்திருந்த மதுபாட்டில்கள் 442 ( 180 MI ) ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. 



 ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில் மேற்பபார்வையில், மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.www.livecid.in

CHIEF REPORTER
Prasanth.s



கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !