அரசு பள்ளி மாணவி அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார் - நக்கசேலம் - பெரம்பலூர் - பதறும் பெற்றோர்.பெரம்பலூர் குற்ற செய்திகளின் தொகுப்பு.www.livecid.in

User 1
0


பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய 11 ஆம் வகுப்பு மாணவி . இச்சம்பவம் இன்று காலை பள்ளி செல்வதற்க்கு ஆர்வமாக ஈச்சம்ப்பட்டி- ல் இருந்து நக்கசேலம் அரசு மேல்நிலை பள்ளி செல்வதற்க்கு, துரைசாமி(46)- லதா (40) அவர்களின் மகள் விஜயலெட்சுமி(16) 
 
   



என்ற மாணவி பாடலூர் to துறையூர் செல்லும் அரசு பேருந்தி ல் ஏறியுள்ளார். ஆனால் இடம் இல்லாத காரணத்தால் படி ஓரம் நின்றுகொண்டு சென்றுள்ளார்.கூட்ட நெரிசல் தாங்காமல் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் மாணவியின் இடது கால் மீது ஏறி இறங்கி நசுங்கி உள்ளது.வலது கை படுகாயம் அடைந்துள்ளது.  தப்பி ஓடிய நடத்துநர் துரைசாமி மற்றும் ஓட்டுனர் தங்கவேல் ஆகியோரை பிடித்து இது குறித்து பாடாலுர் காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
 
இச்சம்பவம் பள்ளிக்கு அருகாமையில் நடந்தும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.பொது மக்கள் தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது அலட்சிய பதிலை கொடுத்துள்ளார்.
பொது மக்கள்: 
மாணவர்கள் மற்றும் மக்கள் கூறுவது  காலை 9 மணிக்கு பேருந்து வசதி குறைவாக உள்ளது , இதன் காரணமாகவே பேருந்து படியில் பயணம் செய்யும் அபாயம் ஏற்படுகிறது. பேருந்து புதிதாக விட  சொல்லி விராலிபட்டி , புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி மக்கள் மனு கொடுத்து ஏமாற்றம் மட்டுமே என ஆதங்கப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் இதனை கண்டுகொள்வாரா.....

நக்கசேலம் அரசு மேல்நிலை பள்ளியில் அடிப்படை வசதி ஏதும் கிடையாது .என்பதும் குறிப்பிடத்தக்கது, கழிவறை கிடையாது , மிதிவண்டி நிறுத்தம் கிடையாது.

மிதிவண்டி நிறுத்தம் இருந்துருப்பின் மாணவர்கள் மிதி வண்டியில் வந்துருக்களாம் , அடிப்படை வசதி இல்லை என்பது கூட விபத்துக்கான காரணமாக கூட அமைகிறது.

நக்கசேலம் மேல்நிலை பள்ளியின் மீது தொடர்து புகார் வந்த வண்ணம் உள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் இதனை கண்டு கொள்வாராா? ........
 
 
 
 

livecid.in
Chief reporter
Prasanth.s

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !