ஆட்டுக்குட்டியை தேடி சென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது - Livecid
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகே தாமனேரி கிராமம் ரங்கா புரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 2ம் தேதி காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆதி வராதபுரம் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பஞ்சாட்சரம் கத்தியை காட்டி மிரட்டி அந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பஞ்சாட்சரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
POSCO is the abbreviation of Protection of Children from Sexual Offences Act, 2012. To deal with child sexual abuse cases, the Government has brought in a special law, namely, The Protection of Children from Sexual Offences(POSCO) Act, 2012.